டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியது தொடர்பாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனவும், இதன் மூலமாக மதுபான ஆலைகள் சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டுள்ளது எனவும் டெல்லி துணை முதலவர் மணீஷ் சிசோடியா மீதான விசாரணையைத் தொடர்ந்து, அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிபிஐ கடந்த மாதமே 26ஆம் தேதியே, மணீஷ் சிசோடியவை கைது செய்து திகார் சிறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று அமலாக்கத்துறையினர் சிசோடியாவிடம் திகார் ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். 2 நாள் விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில் சிசோடியா தரப்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், அமலாக்கத் துறையும், சிசோடியாவை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறையினரின் கேள்விகளுக்கு சிசோடியா பதில் அளிக்க மறுப்பதால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இன்று அமலாக்கத்துறையினர் சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]