டெல்லி: இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களை பெருமைப்படுத்தும் வகையில், “பெண்கள் எட்டாத உயரம் இல்லை” என என பிரபல இணையதளமான கூகுள், சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
அதுபோல, பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்துகளைத் தொிவித்து உள்ளார்.
பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா அங்கீகரித்தது. அதன்படி இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, மார்ச் 8ந்தேதி பெண்மையை போற்றும் வகையில் உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை யொட்டி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட மகாகவி பாரதியார் pநினைத்ததுபோல இன்று பெண்கள் புதுமைப்பெண்களாக மாறி, ஆண்களுக்கு இணையான அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற கேட்ட நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று பெண்கள் தொடாத உயரம் இல்லை, எட்டாத உச்சம் இல்லை. உலக அரங்கில் பல நாடுகளில் பெண்களே அரசாட்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுள், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.
அதுபோல, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞா் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மலாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்துகளைத் தொிவித்துள்ளார்.