சென்னை:
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம் என்றும், வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel