ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான நேரம் பிப்ரவரி 10ந்தேதி மாலை 3மணி உடன் முடிவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறுகறது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்ரதலில் 77 பேர் களத்தில் உள்ளனர்.இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடும் போட்டிகள் மற்றும் சர்சைகளுக்கு இடையே இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக காலை 6மணி அளவில் அரசியல் கட்சியினரின் முன்னிலையில், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து, தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்தனர்.
இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
77 வேட்பாளர்கள் இருப்பதால் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 வாக்கு மையகளில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இடைர்தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 5 கம்பெனி போலீசாரும்,வாக்குச்சாவடி மையத்திற்கு 693 காவல்துறையினர் என மொத்தம் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்