டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது,  உச்சநீதிமன்றம் அதிரடியாக  மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையை அடுத்து அதானியின் சொத்து மதிப்பு சரிவை சந்தித்த நிலையில், இது குறித்து செய்தி வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தடை விதிக்க முடியாது என கூறி  மனுவை தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக அதானி குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் குழு அமைக்கப்படும் வரை ஊடக அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது சதியின் விளைவா இல்லையா என்பதை விசாரிக்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் சர்மா கூறியிருந்தார் இதற்குப் பிறகும் அதானி குழுமம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுபோன்ற அறிக்கை களால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

அதனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வாதங்களை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘எங்கள் உத்தரவை ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ளோம், அதை அறிவிப்போம். சரியான காரணத்தைக் கூறுங்கள். ஊடகங்களுக்கு தடை விதிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பிப்ரவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,

தற்போது, ஊடகங்களுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது எனவும், எங்கள் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம் என  தலைமை நீதிபதி  டி.ஒய்.சந்திரசூட், “ஊடகங்களுக்கு எதிராக நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம். நாங்கள் எங்கள் உத்தரவை மட்டும் பிறப்பிப்போம் என தெரிவித்தார்.