பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் :

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை எனக் கூறினார்.

மேலும், சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு பாஜக அரசு ஈழ தமிழர் பிரச்சனையில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டினார்.

அதேவேளையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது என்று சந்தேகம் எழுப்பினார்.