சென்னை: ஒரே நபரிடம் இரண்டு ரேஷன் அட்டைகள்? என்பது குறித்து களஆய்வு நடத்தவும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக – உணவுப்பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக் கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்க கூடாது
வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் பெறுபவர்கள் குறித்து கள விசாரணை நடத்தப்பட வேண்டும்,
ஒரே நபர் இரண்டு ரேஷன் அட்டை வைத்துள்ளார்களா? என்பது குறித்து களஆய்வு நடத்த வேண்டும்,
இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்க கூடாது
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை வழங்க வேண்டும்
ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது
திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும்
ஒரே நபர் தமிழகம், வெளிமாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.