சென்னை: தமிழ்நாடு அரசு, குமரியில் உள்ள விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்துக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கண்ணாடி இழை பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி கடலில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அதற்கு அடுத்த பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி இழையினாலான கூண்டுப்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும். இந்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
குமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்!