வாஷிங்டன்: பிரபல விமான நிறுவனமாக போயிங் நிறுவனம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போயிங் ( Boeing ) என்னும் நிறுவனம் வில்லியம் போயிங் என்பவரால் ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வானூர்தி தயாரிப்புத் துறையிலும், விண்வெளி, மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையிலும் சிறந்து இது விளங்குகிறது. பல நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றால் கடுமையான சரிவுகளை சந்தித்த பெருநிறுவனங்கள், ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக பிரபல மென்பொருள் நிறுவனங்களான, மைக்ரோ சாஃப்ட், கூகுள், அமேஷான். பேஸ்புக், ட்விட்டர், உள்பட பல நிறுவனங்கள் பல ஆயிரம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது உலக நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்கட்டமாக போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பொறியியல் மற்றும் தயாரிப்பு துறையில் கூடுதலாக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்திப் பிரிவில் 15,000 பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும் இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
கடந்த மாதம், ஆர்லிங்டன், வர்ஜீனியாவை தளமாகக் கொண்ட நிறுவனம் 2022 இல் 15,000 பேரை வேலைக்கு அமர்த்திய பின்னர் 2023 இல் 10,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்தது, ஆனால் சில ஆதரவு நிலைகள் குறைக்கப்படும் என்று கூறியது. “முதன்மையாக நிதி மற்றும் மனிதவளத்தில் இந்த ஆண்டு சுமார் 2,000 குறைப்புக்கள் குறைதல் மற்றும் பணிநீக்கங்கள் ஆகியவற்றின் மூலம்” எதிர்பார்க்கப்படுகிறது அன்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.