டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று கூறினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக உறுப்பினர்களுக்கு தருவதற்காக மத்திய பட்ஜெட் நகல் மக்களவைக்கு கொண்டு வரப்பட்டது. அதை மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த அதிகாரிகள், பட்ஜெட் வாசிக்கத் தொடங்கியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினர்.
இதையடுத்து காலை 11மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார். அப்போது,
“நாட்டின் 75ஆவது அமிர்த பெருவிழாவின் பட்ஜெட் என்றவர், இது இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்” என கூறினார்.
”இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம், உலக அளவில் இந்தியாவில் தால் அதிக பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும். . உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன
”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் ஆகியவற்றுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது”
அம்ரித் காலுக்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித் துறை ஆகியவை அடங்கும். சப்கா சாத், சப்கா பிரயாஸ் மூலம் இந்த ‘ஜன்பகிதாரி’யை அடைய வேண்டியது அவசியம்.
1) உள்ளடக்கிய வளர்ச்சி 2) கடைசி மைலை அடைதல் 3) உள்கட்டமைப்பு முதலீடு, 4) திறனை அதிகரித்தல் 5 ) பசுமை வளர்ச்சி, 6) இளைஞர்கள் 7) வலுவான நிதித் துறை
கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது
தனிநபர் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் முதுகெலுமபான விவசாயட்த்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயத்துக்கு கடன் வழங்க 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளது
ICMR நிறுவனங்கள் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.