சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் (Murali Vijay) , வலதுகை ஆட்டக்காரரான இவர், முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிக்காகவும் ஆடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் அணிக்காக முதல்தரத் போட்டிகளில் விளையாடினார். 2006-2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் ஒருவரானார். இதையடுத்து, அக்டோபர் 2008 ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.
இவரது சாதனைகளைப் பார்த்து, கடந்த நவம்பர் 2008 ல் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில், கவுதம் கம்பீருக்கு ஓர் போட்டியில் விளையாடத் தடை விதித்ததால் அவருக்குப் பதிலாக துவக்க வீரராக களம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்.
தற்போது 38 வயதான விஜய் முரளி விஜய், இதுவரை இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளிலும், 17 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரை இந்திய அணி தேர்வு செய்யாத நிலையில், இன்று அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக பங்களித்தவர் ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடியதுடன். தமிழ்நாடு அணிக்காக நீண்ட காலமாக சிறப்பான பங்களிப்பை அளித்தவர். தற்போது அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்துள்ளார்.