டெல்லி: விமான பயணத்தின்போது, இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான இயக்குனரம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 6ம் தேதி பாரிஸ் டில்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையில் ஒரு ஆண் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விமான இயக்குனரகத்தில், புகாரளிக்காததற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் ,26ந்தேதி நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது, ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், விவகாரத்தில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது.