தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க.
காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை வைத்திருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக தேர்வு செய்து கட்சி மேலிடம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.