நியூயார்க்: பிரபல இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 வேலைகளை குறைக்கும் என சுந்தர்பிச்சை மின்னஞ்சலில் ஊழியர் களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில்,, கூகுளும் 12ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்து மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைகிறது
கொரோனா பெருந்தொற்றால், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இன்னும் உயரதாக நிலையிலேயே தொடர்கிறது. இதனால் பெரும்பாலான உலக நாடுகள் கடுமையாக திண்டாடி வருகிறது. இதன் பாதிப்பு பெரும் நிறுவனங்களில்லும் எதிரொலிக்கிறது. இதனால் மைக்ரோ சாப்ட், அமெஷான் உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, 12,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், ” கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் தோராயமாக 12,000 ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். நாங்கள் உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, நம்பமுடியாத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை பெறுகிறோம். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம். இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர் கொண்டு வருகிறோம். இருப்பினும், நமது வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் ” என்று தெரிவித்தார். ஏறக்குறைய 25 ஆண்டைக் கடந்த கூகுள் நிறுவனம், தற்போது கடினமான பொருளாதார சுழற்சிகளை கடக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.