இந்தியா நீங்கலாக, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
கூகுள், அமேசான், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து சுமார் 11000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி நிலவரப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் சுமார் 2,21,000 பேர் பணியில் உள்ளனர். இதில் அமெரிக்காவில் 1,22,000 பேரும் மற்ற நாடுகளில் 99,000 பேரும் பணிபுரிகின்றனர்.
பொருளாதார சரிவு காரணமாக மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.