சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று 5வது நாளாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கின.

இதையடுத்து, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்,  சரத்யாதவ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி,  அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதுடன்,  திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.