சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என தமிழில் வணக்கம் செலுத்திவிட்டு, ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உள்பட திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
முன்னதாக சட்டப்பேரவைக்கு காலை 9.50மணி அளவில் வருகை தந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று அழைத்துச் சென்றார். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வருகை தந்தார். அதைத்தொடர்ந்து, வழக்கமான நடைமுறைகளுடன் அலுவலல் தொடங்கியது.
இதையடுத்து அனைவருக்கும் வணக்கம் என தமிழில் வணக்கம் செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார். தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது , மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே என உரையை வாசித்தார். ஆளுநர் ஆர்.என். ரவி. திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘தமிழ்நாடு எங்கள் நாடு’ என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடபப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் தனது உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார்.
இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுகுழு கூடி, பேரவையை எத்தனை நாள் என முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இன்றைய ஆளுநர் உரையில், தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான, சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடப்பட்டு வருகிறது.