சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பச்சரி, சர்க்கை, கரும்பு உடன் ரூ.1000 வழங்கி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, நாளை முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரை, கரும்பு உடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பபாக வழங்கப்படுகிறது. பொங்கல்6 பரிசு தொகுப்புக்காக தமிழகஅரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம், இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை பயனர்களுக்கு வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்கள் 13-ம் தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளனர்.