சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜன் கோவில் ஆரூத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 6ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும், நடைபெறும், ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் உலக பிரசித்தி பெற்றது. ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
இதை விழாவில் கலந்துகொண்டு சிவபெருமானின் அருள் பெற லட்சக்கணக்கானோர் சிதம்பரம் வருவது வழக்கம். இந்த ஆண் ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொடி தினசரி பல்வேறு வாகனங்களில் பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா தினமும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நாளை சிதம்பரம் நடராஜர் கோவில், தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர்.
அதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 6-ம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெற உள்ளது. நாளை மறுதினம் (6ந்தேதி) மதியம் 2 மணியளவில் ஆரூத்ரா தரிசன நிகிழ்வு நடைபெறுகிறது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.
இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.