சென்னை: சென்னையில் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுவதால், நாள் ஒன்றுக்கு 3,000 டன் மாசு தடுக்கப்பட்டு, மக்கள் வாழ்வதாரம் சேமிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ள அறிமுகப்பட்டுள்ள பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மூலம் 3000 டன் கார்பன் உமிழ்வுகள் செவளிமண்டலத்தில் நுழைவதைத் தடுக்கின்றன. இதையடுத்ரது, ‘சென்னை மாநகராட்சி பேட்டரி வாகனங்களை இயக்க மேலும் 350 பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தினமும் சுமார் 5,000 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. அவை 19,158 தொழிலாளர்கள் மூலமாக வீடுவீடாகச் சென்று சேகரிக்கப்படுகின்றன. அந்த குப்பைகள் 5,482 எண்ணிக்கையில் உள்ள 3 சக்கர சைக்கிள்களில் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள 14,500 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.
இவை காம்பாக்டர் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது 3 சக்கர சைக்கிள்களுக்கு மாற்றாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ், பேட்டரியால் இயங்கும் 411 எண்ணிக்கையிலான 3 சக்கர வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் முதன்முறையாக கடநத் 2019ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 14 வாகனங்கள் வழங்கப்பட்டன. தற்போது அவை பெருகி 5,863 பேட்டரி வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்கள் இயக்குவதற்கு எளிதாக இருப்பதால், பண் பணியாளர்களும் இயக்குகின்றனர். இது பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு குப்பைகள் ஏற்றப்பட்ட சைக்கிள்களை சிரமப்பட்டு இழுத்து வருவார்கள். பேட்டரியால் இயங்கும்மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள், குப்பை எடுத்து வருவதை எளிதாக்கிவிடுகிறது. இந்த வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வீடுவீடாகச் சென்று வாங்கி வருகின்றன.
சென்னை மாநகராட்சியின் பேட்டரி மூலம் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மாசுவைக் குறைக்கவும் உதவுகின்றன. நடைமுறையில் உள்ள லாரி போன்ற டீசல் வாகனங்களை ஒப்பிடும் போது, இந்த வாகனங்கள் மாசில்லாத வகையில் உள்ளது. மேலும், பேட்டரி வாகனங்கள் நிகர கார்பன் வெளியேற்றத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க உதவுகின்றன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, மாநகராட்சியிடம் 5,863 பேட்டரி வாகனங்கள் குப்பை சேகரிப்பதற்காக உள்ளன, தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை சேகரிக்கும் மண்டலங்களில் 2,107 வாகனங்களையும், தென் சென்னையின் ஏழு மண்டலங்களில் அர்பசர் சுமீத் 2,919 வாகனங்களையும், சென்னை என்விரோ 837 வாகனங்களையும் பயன்படுத்துகிறது.
இந்த வாகனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 3,000 டன் கார்பன் வெளியேற்றத்தை சேமிக்கிறது. ஒரு வாகனம் உமிழ்வை சுமார் 0.5 டன் குறைக்கிறது. இதனால் இந்த வாகனங்களை மேலும் அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, இந்த வாகனங்களில் உள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யும் வகையில், 88 இடங்களில் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும், மேலும் 365 பேட்டரியில் இயங்கும் வாகனங்களை வாங்கவும், மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த திட்டம் கூறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நிபுணர் ஜியோ டாமின், பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக பூஜ்ஜிய உமிழ்வு இருக்க முடியாது, ஆனால் டீசல் வாகனத்தை விட மிகக் குறைவான உமிழ்வு. அதனால் சென்னை “மாநகராட்சி தனது லாரிகளை படிப்படியாக அகற்றி, அவற்றையும் EV ஆக மாற்ற வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி உயர்அதிகாரி, மாநில அரசாங்கத்தின் கொள்கைகளைப் பொறுத்து, அனைத்து GCC வாகனங்களையும் மின்சாரத்திற்கு மாற்ற யோசித்து வருகிறது என்றும், முழு மின்சார வாகனக் குழுவைத் தேர்ந்தெடுப்பது நீண்ட கால நடவடிக்கையாக உள்ளது என்று தெரிவித்ததுடன், பிஸியான பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அறிமுகப்படுத்துவதே தங்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது, அதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்,.
மேலும், மாசு கட்டுப்படுத்தப்படுவதில் பேட்டரி வாகனம் பெரும் பங்காற்றி வருவதாகவும், பூஜ்ஜிய உமிழ்வைப் பொறுத்தவரை, பேட்டரி வாகனங்கள் குறைந்தபட்ச உமிழ்வு என்ற பெரிய இலக்குக்கு உதவுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இதுமட்டுமின்றி, கார்பன் கிரெடிட் திட்டத்தின்படி, மாசு ஏற்படுத்துபவர்கள், அதாவது கார்பன் உமிழ்ப்பவர்களிடமிருந்து வருவாய் பெறவும் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டெண்டர் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.