டெல்லி: இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இநத் நிலையில், கடந்த 9ந்தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய – சீனப்படை இடையே மோதல் ஏற்பட்டது. தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், இரு நாட்டு ரணுவ வீரர்களும் அவரவர் இடங்களுக்கு திரும்பினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. அங்கு படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.
இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்து விவாதிக்க எதிர்கக்ட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், சீனாவுடனான எல்லைச் சூழல் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் விதி 267ன் கீழ் வணிகத் தடை அறிவிப்பை வழங்கினார். சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். காங்கிரஸ் எம்பி டாக்டர் அமீ யாஜ்னிக், சீனாவுடனான எல்லைச் சூழல் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் விதி 267ன் கீழ் வர்த்தக அறிவிப்பை வழங்குகிறார். காங்கிரஸ் எம்பி ஜெபி மாதர், சீனாவுடனான எல்லைச் சூழல் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் விதி 267ன் கீழ் வர்த்தக அறிவிப்பை கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவை தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சீன எல்லை விவகாரம் குறித்து பேச காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில் மறுக்கப்பட்டடுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஏற்கெனவே இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்வதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.