சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் கடுமையாக சேதமடைந்த நிலையில், அந்த பாலம் மீண்டும் புயல் வேகத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த பாலத்தை மீண்டும் நாளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 9ந்தேதி சென்னையை தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து நவம்பர் 27-ல் திறக்கப்பட்ட மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்திருந்ததார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி புயல் வேகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. மீண்டும் கட்டைகள் சீரமைக்கும் பணி நடைபெற்ற வந்த நிலையில், அந்த பணிகள் இன்று முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாளைமுதல், மீண்டும் மரப்பாதை சீரமைக்கப்பட்ட மரப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.