நியூயார்க்: டிவிட்டரைத் தொடர்ந்து, அமேஷான் உள்பட பல பிரபல மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  கூகுளில் பணி நீக்கங்கள் குறித்து சுந்தர் பிச்சை, ‘எதிர்காலத்தை கணிப்பது கடினம்’ என கூறிய கருத்து, அங்கு பணியாற்றி வரும் பல லட்சக்கணக்கான ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

“எதிர்காலத்தை கணிப்பது மிகவும் கடினமானது, எனவே துரதிர்ஷ்டவசமாக, என்னால் நேர்மையாக இங்கு உட்கார்ந்து முன்னோக்கி நோக்கும் உறுதிமொழிகளை சொல்ல முடியாது” என்று கூகுள் ஊழியர்களிடம் பேசிய சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதனால், கூகுள் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான  பேரன்ட் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவரது தலைமையின் கீழ் கூகுள் திறம்படி செயலாற்றி வருகிறது.  கூகுள் நிறுவனத்தில் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் சேர்த்து, 1,56,500 பேர் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1,21,000 பேர் காண்டிராக்ட்  ஊழியர்களாகவும், 1,02,00 பேர் முழு நேர ஊழியர்களாகவும் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது. ஆனால் மற்றொரு ஊடகத்தகவல் 1லட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறுகிறது. இதில் எது உண்மை என்பது அந்நிறுவனத்துக்குத்தான் தெரியும்.

இந்த நிலையில்தான் மற்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே  கடந்த அக்டோபர் மாதம்  வெளியிட்டிருந்த தகவலின்படி, கூகுள் நிறுவனத்தில் பணிநீக்க பருவத்தில்10,000 பேர் உள்ளதாகவும்,  ‘குறைந்த செயல்திறன் கொண்ட’ ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் அதாவது 6 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பபதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் கூகுள் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை செய்யப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு,  “எதிர்காலத்தை கணிப்பது கடினம்” என்று கூறினார். 2023 ஆம் ஆண்டில் கூகுள் தனது பணியாளர்களை “கால்” செய்யுமா என்ற கேள்விக்கு,  பொருளாதாரத்தின் “புயலைச் சிறப்பாகச் செய்ய” Google மாற்றங்களைச் செய்து வருவதாகக்  கூறினார். மேலும்,  துரதிர்ஷ்டவசமாக, நேர்மையாக இங்கு அமர்ந்து முன்னேற முடியவில்லை என்றும் கூறினார்.

கடந்த சில மாதங்களாக நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்த வரையில் சமாளிப்போம். சவால்களை சமாளிக்கும் அளவுக்கு முயற்சி செய்துள்ளோம். எனினும் என்ன வரப்போகிறது என தெரியவில்லை. எனினும் அது அதனை பொருட்படுத்தாமல் அதில் கவனம் செலுத்தி, முடிந்த வரையில் சிறப்பாக செய்வோம்.

இதனால், கூகுள் நிறுவனத்தில் சிலர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,  குறைந்த செயல்திறன் கொண்ட சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அmதாவது, புதிய “தரவரிசை மற்றும் செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் மோசமான செயல்திறன் கொண்டவர்களாக மதிப்பிடப்படும்  பணியாளர்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியேற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சுந்தர்பிச்சையின் இந்த தகவல், மெட்டா மற்றும் அமேசான் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநீக்கங்களுடன், கூகிளில் சில ஊழியர்களை பதற்றமடையச் செய்தது, ஆனால் நிறுவனம் பணியமர்த்தல் மந்தநிலை உட்பட மோசமான பொருளாதாரத்திற்குத் தக்கவைக்க  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.