சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளத. இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (13ந்தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகிளல் ஒருசில இடங்களிலும், இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் 15ந்தேதி முதல் 17ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 24மணி நேரம் முதல் 48மணி நேரம் வரை நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.