சென்னை:
தமிழ்நாடு அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.

சென்னை கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்த இறுதிப்போட்டியில் 21 காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. திருநாவுக்கரசு வெள்ளி, விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெண்கலம் வென்றார். ரைபிள் பிரிவில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தங்கம், விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெள்ளி வென்றார். ரைபிள் பிரிவில் சேலம் காவல் கண்காணிப்பாளர் அபினவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்த பிரிவில் அபினவ் தங்கம், அபிஷேக் குப்தா வெள்ளி, திருநாவுக்கரசு வெண்கல பதக்கங்களை தட்டி சென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஜி.பி., சைலேந்திர பாபு, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
[youtube-feed feed=1]