காசி:
உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள வரலாற்று ஆன்மிக ஸ்தலமான காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், இந்த நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் நடக்கும்காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.