பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதன்படி, இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே UK-India Young Professionals திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதன்படி, 18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்திய குடிமக்கள் இரண்டு வருடங்கள் வரை வாழவும் வேலை செய்யவும் UK க்கு வருவதற்கு 3,000 இடங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் பாலியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. அங்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பிரதமரின்கோரிக்கையை ஏற்று, இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதாவது, இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணியாற்ற பட்டதாரி இளம்தொழில் வல்லுநர்களுக்கு 3,000 விசாக்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி பார்ட்னர்ஷிப்பை எடுத்துக்காட்டி, இதுபோன்ற திட்டத்தில் இருந்து பயனடையும் முதல் விசா-தேசிய நாடு இந்தியா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் ட்வீட்டில், UK-India Young Professionals திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்திய குடிமக்கள் இங்கிலாந்துக்கு வந்து 3,000 இடங்களில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும், வேலை செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டையும் விட இங்கிலாந்து இந்தியாவுடன் அதிக தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அனைத்து சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.