சென்னை: கடலூரில் மழைபாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை பெய்த மழையே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இதுவரைஇல்லாத அளவுக்கு 44 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால், அந்த பகுதி தீவுபோல காட்சி அளிக்கிறது. மேலும் கடலூர் மாவட்டத்திலும் பெரும் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் சென்றுள்ளனார்.
இன்று காலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த 1 பயனாளிக்கும் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்தது, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளப் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார்.