திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ள போதும், அரிவாள் பிடிக்கத்தெரியாத இளைஞர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாயாண்டியின் உடலை வாங்கப்போவதில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியல் செய்து வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
Patrikai.com official YouTube Channel