சென்னை: தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் ரயில் தனது சோதனை ஒட்டத்தை இன்று தொடங்கி உள்ளது. அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து அதிகாலை புறப்பட்ட வந்தே பாரத் ரயில், புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது முழு வேகத்திறனான 160 கி.மீ. வேகத்தில் பறந்தது. அதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தனது சோதனை ஓட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் சென்னையில் உள்ள ஐ.சி.எப். ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறைந்த எடையுடன் கூடிய இந்த ரயில், பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். தற்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முழுவதும் குளிரூட்டப்பட்டது பல சிறப்பு அம்சங்களுடம் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது. இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த வந்தே பாரத் ரயில் ஏற்கனவே டெல்லி-வாரணாசி, டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் அம்ப் அந்தாரா –தடெல்லி என 4 இயக்கப்படுகின்றன. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், 5-ஆவதாக சென்னை, மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதையொட்டி இன்று வெள்ளோட்டம் நடைபெற்றது. இன்று காலை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான சோதனை ஓட்டர்ததை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, அதிகாலை சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மைசூருக்கு இயக்கப்பட்டது.
நாடு முழுவதும் அதிக வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும் படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வந்தேபாரத் ரயில், ஆம்பூரை கடந்து அதிவேகத்தில் மைசூர் நோக்கி சென்ற வீடியோ,,,