காந்தி நகர்: குஜராத் மாநில ஆத்ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கத்வி அறிவித்தார்.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபை கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி குஜராத் சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக இறங்கி உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு சாவுமணி அடிக்க கெஜ்ரிவால் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கி உள்ளது. இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கப்படி டிசம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1, 5ஆம் தேதி களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
இந்த நிலையில், அங்குள்ள பாஜக, காங்கிரஸ், ஆத்ஆத்மி கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர முன்வரும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே அங்கு களமிறங்கி மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. ஏற்கனவே இலவச மின்சாரம், குடிநீர், இலவச கல்வி, பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, அதகளப்படுத்தி வரும் கெஜ்ரிவால், குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் என்பது குறித்த தொலைபேசி எண்ணை அறிவித்து சர்வே நடத்தி அறிவித்து உள்ளது.
ஆம் ஆத்மி முன்பு ஏற்கனவே இதே முறையைத்தான் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி பின்பற்றியிருந்தது. அதன்படி எடுக்கப்பட்ட சர்வேயில், 40- வயதான இசுதான் கத்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இசுதான் காத்வி பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்த நிலையில், அவரை முதல்வராக தேர்வு செய்ய நடத்தப்பட்ட சர்வேயில் 73 சதவீதம் பேர் இசுடான் கத்விக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, குஜராத் மாநில முதல்வர் வேட்பாளராக முதன்முதலாக ஆத்ஆத்மி கட்சி இசுதான் கத்வி பெயரை அறிவித்து உள்ளது. இன்று குஜராத்தில் செய்தியாளர்களிடம், இதை ஆத்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.