சென்னை:
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]