இந்திய அணி 184/6 பங்களாதேஷ்-க்கு 185 ரன்கள் இலக்கு.

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் ஸ்கோர் 11 ரன் என்ற நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் சர்மா அவுட்டானார்.

இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாட இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 78 ஆக இருந்தபோது 50 ரன்கள் எடுத்து கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

விராட் கோலி மட்டும் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்து 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுக்க உதவினார்.