சென்னை: வியாசர்பாடியில் ரயில்வே பாலத்தின் கீழ் மழைவெள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து, அங்கிருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும், மத்தியசென்னை, தென்சென்னைக்கு கொடுக்கும் முன்னுரிமை வடசென்னைக்கு கொடுக்காததால், வியாசார்பாடி பாலம இன்று காலை மழைநீரால் சூழப்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, பேருந்து மீட்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வியாசர்பாடி கணேசபுரம் ரயில் பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதை அகற்றும் பணியில் மோட்டார்கள் ஈடுபட்டு இருந்தாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த வழியாக வந்த மாநகர பேருந்து தண்ணீரில் சிக்கியது. இதனால், அதில் இருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இன்று முற்பகல் வியாசர்பாடி பாலம் வழியாக போக்குவரத்து செல்ல முடியாதநிலையே நீடித்தது.
பின்னர், அதிகாரிகள் வந்து, மழைநீரை அகற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தியதுடன், பேருந்தை மீட்கவும் நடவடிக்கை எடுத்தனர். , ரெக்கவரி வண்டியை அழைத்து வந்து, பேருந்தை மழைநீரில் இருந்து இழுத்து வெளியேற்றினர். இதையடுத்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்தே ந்த வழியாக வாகனங்கள் மீண்டும் செல்லத் தொடங்கின. மேலும், ஆட்டுத்தொட்டி, டிகாஸ்டர் சாலை, புளியந்தோப்பு போன்ற தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் நீடிக்கிறது. அதை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சியும், தமிழகஅரசும், மழைவெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்படும் வட சென்னை பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழைவெள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து! மீட்கப்படும் வீடியோ…
சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…