இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அகளமிறங்கினர்.
2.4 ஓவரில் எல்.பி.டபுள்யு-வாகி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ராகுல் ஆட்டமிழந்தார் அப்போது அணியின் ஸ்கோர் 11.
இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடியாக விளையாடினர்.
அணியின் ஸ்கோர் 84 ஆக உயர்ந்த நிலையில் 53 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா அவுட்டானார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி இருவரும் அதிரடியை தொடர்ந்தனர்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது கோலி 61 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றி பெற 180 என்ற இலக்குடன் களமிறங்கி இருக்கும் நெதர்லாந்து அணி 2.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.