கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரம் டிகோ மரடோனா 1986 ம் ஆண்டு மெக்ஸிகோ-வில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அணிந்திருந்த ‘ஜெர்சி’ அர்ஜென்டினாவிடம் திரும்ப வந்ததை ஒட்டி அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

2022 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நவம்பர் மாதம் 20 ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது.

டிகோ மரடோனா

இந்த சூழலில் 36 ஆண்டுகள் கழித்து மரடோனாவின் டி-ஷர்ட் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

1986 ஆண்டு அர்ஜென்டினா – ஜெர்மனி இடையே நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 3 -2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.

கால்பந்து உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் டிகோ மரடோனா தனது டி-ஷர்ட்டை ஜெர்மன் வீரர் லோதர் மத்தயஸ்-ஸிடம் கழட்டி கொடுத்தார்.

அதே உலகக்கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றது அர்ஜென்டினா, இதில் ‘ஹாண்ட் ஆப் காட்’ என்று புகழப்படும் கோலை அடித்த மரடோனா-வின் டி-ஷர்ட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ்-ஜிடம் கழட்டிக் கொடுத்தார்.

லோதர் மத்தயஸ்

2020 ம் ஆண்டு மரடோனா மறைந்ததை அடுத்து இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் இந்த டி-ஷர்ட்டை 7.1 மில்லியன் டாலருக்கு இந்த ஆண்டு ஏலத்தில் விற்றார்.

இந்த நிலையில், மரடோனா தனக்கு நட்புடன் வழங்கிய டி-ஷர்ட்டை ஏலத்தில் விற்று காசாக்க தனக்கு மனமில்லை என்று கூறிய லோதர் மத்தயஸ் இதை அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திடம் திரும்ப வழங்க முடிவு செய்தார்.

லோதர் மத்தயஸ் இந்த முடிவை மரடோனா ரசிகர்கள் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர்.

[youtube-feed feed=1]