சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பான புகார்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
கீ.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராசா இந்து மதம் குறித்து இழிவாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலர் புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், ஆ.ராசா மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அது முடித்து வைக்கப்பட்டதாகவும், ஆ.ராசாவுக்கு எதிரான புகார் மீது காவல்துறை விசாரணை நடத்தியதில், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.