பாட்னா: தனது வாழ்வில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களிடைய மோதலை உருவாக்கும் வகையில் பாஜக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் புதிய பொறியியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் நிதிஷ்குமார், தான் முன்பு பாஜக கூட்டணயில் இருந்தேன். அதன் செயல்பாடுகள் பிடிக்கததால், அங்கிருந்து வெளியேறி மீண்டும் மகாபந்தன் கூட்டணிக்கு திரும்பியுள்ளேன். எங்கள் கூட்டணியில் மோதல் ஏற்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. அதற்காகவே செயலாற்றி வருகிறது. எங்கள் கூட்டணியில் மோதலை உருவாக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர். கூட்டணிக்குள் மட்டுமின்றி மக்களிடையேயும் மோதலை உருவாக்கவே பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாது என்று கூறியதுடன், என் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். சமாஜ்வாதிகளுடன் (சோஷலிட்ஸ்களுன்) இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்றப்போகிறேன் என்றார்.
மேலும், கடந்த 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமரான போது மத்திய அமைச்சரவைக்கு என்னையும் தேர்ந்தெடுத்து எனக்கு மூன்று அமைச்சரவையைக் கொடுத்தார் என்பதை பாஜகவினர் மறந்துவிட்டனர். லால் கிருஷ்ணன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தனர். தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆதரவுடன் பீகாரின் முதல்வராக ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ராஸ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுன் மகாஹத்பந்தன் கூட்டணியில் இணைந்து மீண்டும் 8வது முறையாக பீகார் முதல்வராக தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.