காந்திநகர்: பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் இந்திய உலக அரங்கில் முன்னேற முடியும் என குஜராத்தில் இன்று தொடங்கியுள்ள மாநில சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று தொடக்க உரை ஆற்றிய பிரதமர் மோடி கூறினார்.
அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் ,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை சொல்வதற்கும், இதன் மூலம் மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று தொடக்க உரை ஆற்றினார். அப்போது, இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது. மெய்நிகர் விசாரணை மற்றும் இ-ஃபைலிங் போன்ற சட்ட சேவைகளில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கப்பட்டு உள்ளன, மேலும் 5G சேவைகள் இந்த தொழில்நுட்பங்களை மேலும் வலுப்படுத்தும் என்றவர், குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்கினோம். இந்த நீதிமன்றங்களில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன, இதனால் நீதிமன்றங்கள் மீதான சுமை குறைகிறது மற்றும் விஷயங்களை விரைவாக தீர்க்க அனுமதிக்கிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு சமூக முன்னேற்றத்துடன் ஒத்திசைவாக உருவாகும்போது, நீதியின் எளிமை இருப்பதை உறுதி செய்கிறது:
பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் காலனித்துவத்தின் தளைகளை உடைப்பது நமக்கு முக்கியம், அப்போதுதான் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். கடந்த 8 ஆண்டுகளில், வாழ்க்கையை எளிதாக்க 32,000 இணக்கங்களை நீக்கி யுள்ளோம் என அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது.
மாநாட்டில், மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, திறன்மிகு கணக்கீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் சேமிப்பும், எரிசக்தித் துறை சீர்திருத்தங்கள், உரிய நேரத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார நுகர்வோரின் உரிமைகள், 2030-ஆம் ஆண்டில் எரிசக்தி அமைப்புமுறை, எரிசக்தி பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.