ஸ்ரீஹரிகோட்டா: 2022 அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்த உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள்களை இம்மாதத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்,  உலகளாவிய வணிக வெளியீட்டு சேவையில் நுழைகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் இம்மாத கடைசி வாரத்தில் விண்ணில் ஏவ உள்ளது.  இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது.

இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை இஸ்ரோவுக்கு வந்துள்ளது. இவற்றை விண்ணில் செலுத்த  GSLV Mk-III வாகனம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.  அக்டோபர் 3வது அல்லது 4வது வாரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதில் முதல் நிலை திட எரிபொருள், 2-வது திரவ எரிபொருள் மற்றும் 3-வது நிலையில் கிரையோஜெனிக் எந்திரம் பொறுத்தப்பட்டு உள்ளது.

36 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன மற்றும் விநியோக அலகுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து கிரையோஜெனிக் என்ஜின் உள்ள 2-வது கட்டத்தில் 36 செயற்கைகோள்களுடன் வெப்பக் கவசம் பொருத்தப்படும்.

இந்த 36 செயற்கைகோள்களும் சுமார் 6 டன் எடையை கொண்டவையாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்து இந்தியா பார்தி குளோபல் மற்றும் இங்கிலாந்து நாட்டு அரசின் கூட்டு முயற்சியாகும். 36 செயற்கைகோள்களின் மற்றொரு தொகுப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் புவி சுற்றுப் பாதையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தவகை செயற்கைகோள்கள் நிறுவனங்களின் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் 650 செயற்கைகோள்களின் தொகுப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுமட்டுமின்றி, 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களின் உரிமை, என்எஸ்ஐஎல்-க்கு மாற்றப்பட இருப்பதாகவும்,  அவற்றின் சேவையை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.