சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட காலமாக கிடக்கும் வாகனங்கள் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள், அங்குள்ள வாகன காப்பகத்தல் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதும், பணி முடிந்து திரும்பியதும், அதை எடுத்துச் செல்வதும் வழக்கம். ஆனால், இதுபோன்று நிறுத்தப்பட்ட சுமார் 120 வாகனங்கள் நெடுநாட்களாக, வாகன உரிமையாளர்களால் மீண்டும் எடுத்துச்செல்லப்படாமல் உள்ளது.
இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாகன காப்பகங்களில் நீண்ட காலமாக எடுக்கப்படாமல் உள்ள 120 வாகனங்களை உரிய ஆவணங்களை காட்டி எடுத்துக்கொள்ளும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Patrikai.com official YouTube Channel