காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாளாக கேரளாவில் இன்று தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.
திருவனந்தபுரத்தில் நேற்று காலை துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் மாலை கழக்கூட்டம் சென்றடைந்தது.
கழகூட்டம் அருகில் உள்ள கனியபுரத்தில் இன்று காலை தொடங்கிய யாத்திரை 15 கி.மீ. கடந்து அட்டிங்கல் பகுதியை மதியம் சென்றடைந்தது.

சற்றுமுன் மீண்டும் துவங்கிய யாத்திரை இன்றிரவு கள்ளம்பலம் சென்றடையும்.
ராகுல் காந்தி செல்லும் வழி எங்கும் மக்கள் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்து வருவதோடு பெருந்திரளானோர் இந்த ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel