சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க, தயாரிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனால், பட்டாசு கடை வைக்க தமிழகஅரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதன்படி, தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்ய சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளதுடன், மொத்தம் 55 பட்டாசு கடைகளை வைக்க மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், 3 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு பட்டாசு கடைகள் அமைக்க வேண்டும் என்றும், சுற்றுலாத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இநத் ஆண்டு விற்பனை செய்யப்பட உள்ள பட்டாசுகளில் 80 சதவீதம் பட்டாசுகள் பசுமைப் பட்டாசுகளாக இருக்கும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பட்டாசு விற்பனை நடத்தப்படும் என்றும் பட்டாசு விலை சற்று உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.