சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய தர உறுதி சான்றிதழ் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel