கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில்,  வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்துவது வெறு கண்துடைப்பா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைம் அறிவித்து உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி, பல இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று (22ந்தேதி) சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், மின் கட்டண உயர்வு கூடாது என வலியுறுத்தினர். ஏற்கனவே வீட்டு வரி உள்பட பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணமும்  உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் பரிசீலிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது விரைவில் பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை. மற்ற மின் கட்டண உயர்வில் எவ்விதமான மாற்றமும் இல்லை என கூறினார்.

தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சு, மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பு என்பது நிரூபணமாகி உள்ளது.

ஒருபுறம் மக்களிடம் கருத்து கேட்பு – மறுபுறம் மின்கட்டணம் உயரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகம்