சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின்போது இருந்த நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மீண்டும் உயிர்பெற்றுள்ளது. அதுபோல, எடப்பாடியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ரத்தாகி உள்ளது.
இந்த நிலையில், தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்ததால், அவரது தரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் வீடு அருகே அதிமுகவினர் குவிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]