டெல்லி: நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இன்று உலக யானைகள் தினத்தையொட்டி, தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக  நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்திய மலை அறிவிக்கப்பட்டுள்ளது.  . இதன் காரணமாக இந்தியாவில் மேலும் ஒரு யானைகள் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் ஏற்கனவே நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை காப்பகங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர், இன்றைக்குப் பிற்பகுதியில், இந்தியாவில் மேலும் ஒரு யானைகள் காப்பகமான அகஸ்தியமலையை தமிழ்நாட்டில் நிறுவி, மேலும் 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சேர்ப்பதன் மூலம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக யானை தினத்தையொட்டி, பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், உலக யானை தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.