டெல்லி: விளம்பரத்துக்காக கோடி கோடியாக பணத்தை வாரியிறைக்கும் கெஜ்ரிவால் அரசு, உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கடனை கண்டுகொள்ளாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாகி உள்ளது. இதுதான் டெல்லி மாடல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
2021-22ல் உயர்கல்விக்காக டெல்லி அரசின் கடன் திட்டத்தின் கீழ் 89 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 மாணவர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்தது. ஆனால் விளம்பரங்களுக்காக 19 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஊழலை எதிர்த்தும், ஏழைகள் மற்றும் சாமானிய மக்கள் வாழ்வில் உயர பாடுபடுவேன் என அண்ணாஹசாரே உடன் சேர்ந்து நாடகமாடி, பின்னர் அவிரிடம் இருந்து பிரிந்து, ஆம்ஆத்மி கட்சி தொடங்கி இரு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அரவிந்த் கெஜ்ரிவால், ‘பப்ளிசிட்டி’க்காக, எதையும் செய்வார் என்பது, வீடியோ மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிய வந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கெஜ்ரிவாலின் நடவடிக்கையை காரி உமிழ்ந்தனர். , ‘பொதுமக்களின் நலனுக்காக, பாடுபடுவது போல், வெளியே காட்டிக் கொள்ளும் கெஜ்ரிவால், தன் சொந்த பப்ளிசிட்டிக்காக, இவ்வளவு தூரம் இறங்குபவரா?’ என அதிர்ச்சி தெரிவித்தனர்.
சமீபத்தில், குஜராத் மாநிலத்தில், பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து நடந்துள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்யப் போவதாக கூறி, அங்கு, உயிருடன் இருப்பவர்களை, இறந்து விட்டதாக கூறி, அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, சொதப்பி சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், அவரது நிர்வாகத்திறமையின்மை வெளிச்சம்போட்டு காட்டும் மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் தெரிய வந்துள்ளது.
டெல்லி மாநில அரசிடம் கல்வி கடன் கேட்டு கடந்த 2015ம் ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்கள், அவர்களில் எத்தனை பேருக்கு கடன் கிடைத்துள்ளது என்ற தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கல்விகடன் கேட்டு விண்ணப்பித்த 58 பேருக்கும் கல்வி கடனை வழங்கிய நிலையில், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் கல்விக்கடன் வழங்குவதை தவிர்த்து, தற்போது 2 பேருக்கு மட்டுமே படிக்க கல்வி கடன் வழங்கி உள்ளது.
கடந்த 2016-17ம் ஆண்டில் 424 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 176 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
2017-18ம் ஆண்டில் 177 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
2018-19ம் ஆண்டில் 139 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 44 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
2019-20ம் ஆண்டில் 146 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 19 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
2020-21ம் ஆண்டில் 106 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 14 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
2021-22ம் ஆண்டில் 89 பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பித்த நிலையில், 6 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில் விளம்பரங்களுக்காக பலகோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
அதாவது செய்தித்தாள்கள் விளம்பரம் (பிரின்ட் மீடியா) ரூ.46,22,685/- (ஏறக்குறைய ரூ.46 லட்சம்)
எலக்ட்ரானிக் மீடியா (ஊடகங்களில் விளம்பரம்) ரூ. 18,81,00,816/- (ஏறக்குறைய ரூ. 19 கோடிகள்)
டெல்லி அரசின் நடவடிக்கையும், முதல்வர் கெஜ்ரிவாலின் விளம்பர மோகமும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சுருக்கமாக சொல்லப் போனால் இதுதான் டெல்லி மாடல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக எதையும் செய்யாதீர்கள், பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களின் மனதைக் கையாளுங்கள் என்பதே டெல்லி அரசின் நோக்கமாக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்த தொடக்க காலங்களில் திறமையான செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்த கெஜ்ரிவால், தற்போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாக மாறி உள்ளார். அவரது ஆட்சியில், ஊழல், சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தலைத்தூக்கத் தொடங்கி உள்ளன. ஐஏஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ள கெஜ்ரிவால், மக்களுக்கு நன்மை செய்வார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தால், அவர், தானும் ஒரு அரசியல்வாதிதான் என்பதை நிரூபித்து வருகிறார். ஏழைமக்கள் படிக்க உதவி செய்ய மறுத்து வரும் கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாகி உள்ளது அவரது கட்சியின் சமீபகால நடவடிக்கைகள், மக்களை கவர அறிவிக்கும் இலவச அறிவிப்புகள், அவர்மீதான இமேஜை தகர்த்து விமர்சனங்களை உருவாக்கி வருகின்றன.