டில்லி

ல்லூரிகளில் சேர்ந்துவிட்டு அக்டோபர் 31க்குள் வெளியேறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.    அதே வேளையில் உயர்கல்விக்காக பொது நுழைவுத் தேர்வைப் பல மாணவர்கள் எதிர் நோக்கி உள்ளனர்.   ஆயினும் முன்னெச்சரிக்கையாக வேறு சில உயர் கல்வி நிறுவனங்களில் அவர்கள் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு சேர்ந்துள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் இடம் கிடைக்கும்போது ஏற்கனவே சேர்ந்துள்ள கல்லூரிகளில் இருந்து விலக நேரிடுகிறது.  பொதுவாக அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தருவது இல்லை.  மேலும் அவர்களிடம் சேர்க்கையை ரத்து செய்யவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் யுஜிசி தற்போது ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.  அதன்படி, “ஏற்கனவே கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வெளியேறினால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும்.  மேலும் சேர்க்கையை ரத்து செய்யத் தனியாகக் கட்டணம் வசூலிக்க கூடாது” என உத்தரவிடப்பட்டுள்ளது.