சென்னை
இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யலாம் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நகரில் மிகவும் விறுவிறுப்பான பகுதிகளில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பு அடைச்துள்ளது.
கனமழை காரணமாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.